எனது பெங்களூர் பயணம் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது..EHS summit 2010 என்ற செமினாருக்காகவும் இன்னும் பிற(!) வேலைகளை முன்னிட்டும் பெங்களூர் செல்ல வேண்டியிருந்தது..பல தரப்பட்ட மனிதர்கள் பல்வேறு தேசங்களிலிருந்தும் வந்திருந்தார்கள்..செமினார் என்னவோ வழக்கம் போல்தான்(!!)..திரும்பவும் காலேஜ் வாழ்க்கைக்குள் வந்துவிட்டோமோ என்று கூடத் தோன்றியது....அதெல்லாம் சரி..விசயம் என்ன என்று நீங்கள் வினவுவது கேட்கிறது.
இணைய தள பிரபலம் “பரிசல்காரன்” அவர்களை இந்த செமினாரில் சந்தித்ததே அந்த வித்தியாசமான அனுபவம்..அவரை சந்தித்த பிறகே, இணையதளத்தில் எழுதும் ஆர்வம் எனக்குள் உண்டானது..அதன் விளைவே இந்த BLOG ம், இந்த அறுவையும்!!!!